Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 24

மஞ்சள் சுவர் சித்திரங்கள்

$
0
0

இவரையும் என்னையும் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்படிப்பட்ட மாட மாளிகை தங்குவதற்கு கிடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. இதை ஒரு ஜமீன் அரண்மனை, ஏன் சொல்லப்போனால், பேய் வீடு போல் இருக்கிறதென்று கூட மிகைப்படுத்தி விடுவேன். ஆனால் அது விதியுடன் விளையாடுவது போலாகி விடப்போகிறது!

என்ன தான் இருந்தாலும் இந்த மாளிகையை பொறுத்த வரை ஏதோ ஒரு விசித்திரமான குணம் இருக்கிறதென்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். இல்லையென்றால், இந்த பெரிய அரண்மனை எப்படி இவ்வளவு மலிவாக வாடகைக்கு கிடைக்கும்? அதுவும் இத்தனை வருடம் வாழப்படாமல் காலியாக வேறு இருந்திருக்கிறதே…

இவர் சிரிக்கிறார் என்னைப் பார்த்து – இல்லறத்தில் இது என்னவோ எதிர்பார்க்க வேண்டியது தான்.

இவர் மிகவும் எதார்த்தமானவர். நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பொறுமையும் கிடையாது, தீவிர இகழ்ச்சி வேறு. பார்த்து உணர்ந்து அளவிட முடியாத எந்த ஒன்றுக்கும் இவரிடமிருந்து ஒரு சாதாரண மரியாதையை கூட எதிர் பார்க்க முடியாது.

மேலும், இவர் ஒரு மருத்துவர். ஒரு வேளை … (இதை நான் யாரிடமும், எந்த ஒரு உயிருள்ள ஜீவனிடமும் கூட சொல்லி இருக்க மாட்டேன். இது ஒரு வெற்று காகிதமாக இருப்பதனாலோ என்னவோ, இப்படி பதிவு செய்வதனால் ஏதோ ஒரு மன அமைதி கிடைக்கும் என்று தோன்றுகிறது) … ஒரு வேளை, அதனால் தானோ என்னவோ நான் சீக்கிரமாக குணமடையாமல் இன்னும் தவித்து கொண்டிருக்கிறேன்…

என்னவென்றால், இவரை பொறுத்தவரை என் உடம்பிற்கு ஒன்றுமே இல்லை!

இப்படி சொல்லிவிட்டால் பிறகு என்ன செய்வது?

ஒரு தேர்ந்த மரியாதிக்குரிய மருத்துவர், என் கணவர் – இவரே எல்லா நண்பர்களுக்கும், பந்துக்களுக்கும் எனக்கு உடம்பிற்கு ஒன்றுமே இல்லை என்றும், தற்காலிக நரம்புதளர்வுடன் கூடிய ‘வெறி போக்கு’ (hysterical tendency) என்றும் திட்டவட்டமாக எடுத்துரைக்கும் போது, நான் இனி என்ன செய்வது?

என் தம்பியும் ஒரு கை தேர்ந்த, உயர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவன். அவனும் இவர் சொல்வதையே ஆமோதிக்கிறான்.

ஆகையால் இவர்கள் கொடுக்கும் மருந்துகளையும், மாத்திரைகளையும், திரவியங்களையும் உணவுடன் சேர்த்து கொண்டிருக்கிறேன். உடற்பயிற்சி, பயணங்கள், புது இடங்கள், மாற்று காற்று – என்று இவர்கள் இருவரும் பரிந்துரைக்கும் எல்லாவற்றையும் தவறாமல் செய்கிறேன்.

போதாக்குறைக்கு, என்னை “வேலை” செய்யவே கூடாது என்று ஒரு கட்டளை வேறு இட்டிருக்கிறார்கள். இதில் எனக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை. என்னை பொறுத்த வரை, ஒரு நல்ல உற்சாகத்தை ஊட்டக்கூடிய இன்பகரமான வேலை, எனக்கு நல்லது என்று நான் எண்ணுகிறேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும்?

இவர்களுக்கு தெரியாமல் சில நாள் எழுதத்தான் செய்தேன். ஆனால், ஒளிந்து மறைந்து எழுதுவதும், இல்லையென்றால் இவர்களுடைய கடும் எதிர்ப்பை நேர்க்கொள்வதும், எனக்கு மிகவும் சோர்வூட்டிவிட்டன.

சில சமயம், என்னுடைய உடல் நிலையில், என் மீது எதிர்ப்புகள் குறைவாகவும், நல்ல சமூகமும் ஊக்கமும் அமைந்தால் – ஆனால் இவர் என் உடல் நிலையை பற்றி நான் யோசிப்பதே நான் எனக்கு இழைத்த்துக்கொள்ளும் பெரும் துரோகம் என்று சொல்கிறார். உடனே எனக்கு வருத்தமாகிவிடுகிறது.

எனவே இதை விட்டு, இந்த வீட்டை பற்றி பேச போகிறேன்.

New Project

 

And so I begin translating The Yellow Wallpaper by Charlotte Perkins Gilman – the powerful brief account of a woman’s mental breakdown in the 1920′s. Its my newest pet project and something I am absolutely thrilled to be doing! The book is actually more of an article, it is hardly 20 pages long – something I read a long long time back and deeply moved me. The topic is so universal and rings true even today, I felt compelled to translate to tamil in the hope that it could be something others in my home land could read and get some perspective from.


Viewing all articles
Browse latest Browse all 24

Latest Images

Trending Articles





Latest Images